புலிகளின் இரு படகுகள் நிர்மூலம்,எண்மர் பலி: முல்லைக் கடலில் இன்று மாலை சம்பவம்

முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான இரு வள்ளங்களைக் கடற்படையினர் இன்று  முறறாகத் தாக்கியழித்ததாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இன்று மாலை 3.00 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வடகிழக்கு கடற்பிரதேசத்தை நோக்கி புலிகளின் இரு வள்ளங்கள் செல்வதனை அவதானித்து அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது இரு வள்ளங்களும் முற்றாக அழிக்கப்பட்டன. பின்னர் அங்கு தேடுதல் நடத்திய கடற்படையினர் புலிகளின் இரு சடலங்களை மீட்டனர். ஏனைய ஆறு பேரும் கொல்லப்பட்டிருக்கலாமெனவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply