வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனக் குழுமத்தை மாற்றியமைப்பதற்கு சதி

இராணுவத்தினருக்கு வீடமைப்புத்திட்டம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் சிங்கள் மக்களை குடியேற்றி தமிழ் மக்களின் இனக் குழுமத்தை மாற்றியமைக்கும் சதித் திட்டத்தை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சீ. யோகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிருமிச்சை எனுமிடத்தில் 1000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு அங்கு கடற்படையினரின் குடும்பங்களிற்கான வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யோகேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கான எந்தவொரு நிவாரணத் திட்டங்களும் அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லையென்பதுடன் பெருமளாவன நிதி இராவணுத்தினருக்கான வீடமைப்பு திட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply