பிரபாகரன் ஆசோசனைப்படி ராஜீவை சந்திக்க கிட்டு ஏற்பாடு செய்தார் – கே.பி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனும் இந்தியாவுடனும் நல்ல உறவுகளை பேணுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவ்வியக்கத்தின் முக்கியஸ்தரான கிட்டுவிடம் தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் காசி ஆனந்தன், பொருளாதார வல்லுநர் அர்ஜூன சிற்றம்பலம் ஆகியோரின் மூலமாக இந்தியாவுக்கு சென்று ராஜீவ் காந்தியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கிட்டு மேற்கொண்டிருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை பல்வேறு பிரிவுகள் இருந்தன.அடுத்த பிரிவில் வேறு எவரும் தலையிட முடியாது. தமிழகத்தில் இருந்து செயற்பட்டவர்கள் வேறு ஒருவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர்.

ராஜீவ் கொலை பற்றி எனக்கு மட்டுமல்ல லண்டனில் இருந்த கிட்டுவுக்கும் கூட எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியுடனும் இந்தியாவுடனும் நல்ல உறவை மேம்படுத்துமாறு கிட்டுவிடம் பிரபாகரன் கூறியிருந்தார்.

அதன் பிரகாரம் காசி ஆனந்தன், பொருளாதார வல்லுநர் அர்ஜூன சிற்றம்பலம் ஆகியோர் மூலமாக இந்தியாவுக்கு சென்று ராஜீவ் காந்தியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கிட்டு மேற்கொண்டிருந்தார்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply