இலங்கையில்சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான மாநாடு

சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பில் இலங்கையில் மாநாடு நடைபெறவுள்ளது. 21ம் தெற்காசிய ஆசிரிய பேரவையின் சர்வதேச மனிதாபிமான சட்டம் குறித்த பிராந்திய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடாத்துவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 6ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

கட்டுநாயக்கவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாகவே இலங்கையில் இந்த மாநாடு நடாத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply