இந்திய – ஜப்பான் உறவுகவை வலுப்படுத்த விருப்பம் தெரிவிப்பு
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக ஜப்பான் நாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜப்பானில் கடந்த வாரம் நிலவிய அரசியல் சூழலால் பிரதமரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய பொன்சாய் கண்காட்சியில் பங்கேற்ற மும்பைக்கான ஜப்பானிய துணைத் தூதர், கசுஷிகே ஹிரைஷி பேசியதாவது:-
இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் 60 ஆண்டுகள் பழமையானது. இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, ராணுவ தொடர்புகளை மேலும் வலுப்படுத்த ஜப்பான் விரும்புகின்றது. பிரதமர் மன்மோகன் சிங், கூடிய விரைவில் ஜப்பானுக்கு வர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply