ஐநா அறிக்கை தயாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதிகட்ட யுத்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல் உள்ளடக்கிய சால்ஸ் பெற்றிக்கின் அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே அந்த அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையானது பக்கசார்பானது என அந்த அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

தருஸ்மன் அறிக்கையிலும் ஐக்கிய நாடுகள் சபை தமது உள்ளக நடவடிக்கைகளை பாதுகாத்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் ஆலேசானைகளை பெற்று கொள்ளாது ஐக்கிய நாடுகள் சபை குழு மற்றும் அறிக்கை தயாரிப்பதை வெளிவிவகார அமைச்சு எதிர்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply