2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தோல்வி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. புளத்தசிங்கள பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளது.
வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக சபையின் தலைவர் மட்டுமே வாக்களித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் வரவு-செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாக இருக்கவில்லை.
வாக்கெடுப்பின் போது அவையில் இருந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் எதிர்த்து வாக்களித்தமையினால் வரவு-செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply