பாண்டிபஜார் துப்பாக்கிச்சூட்டு வழக்கில் இருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

சென்னை பாண்டிபஜாரில் 1982ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை நீக்க மேலதிக அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாண்டி பஜாரில் 1982 ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ராகவன் எனப்படும் சிவகுமார் ஆகியோர் சுட்டதில் புளொட் தலைவர், முகுந்தன் எனப்படும் உமாமகேஸ்வரன் மற்றும் ஜோதீஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் காவல்துறையினர் கைது செய்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், சிவனேஸ்வரன் எனப்படும் நிரஞ்சன், ஜோதீஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பிணையில் வெளிவந்த இவர்கள் தலைமறைவானார்கள்.

இந்த வழக்கு 7வது மேலதிக அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு மீண்டும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, குற்றப்புலனாய்வு காவல்துறை சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் முதல் சந்தேகநபராக சேர்க்கப்பட்ட பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும், இந்த வழக்கிலிருந்து அவரது பெயரை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் 6வது மேலதிக அமர்வு நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயரை நீக்க உத்தரவிட்டார்.

மற்றவர்கள் தொடர்பான மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 20ம் நாளுக்கு தள்ளிவைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply