வவுனியாவுக்கு விசேட வைத்தியர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது:சுகாதார அமைச்சு
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியர்கள் குழுவொன்று வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வன்னியிலிருந்து 10,000ற்கும் அதிகமான பொதுமக்கள் வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு வந்திருப்பவர்களில் பலர் மலேரியா, உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குவது பற்றி சுகாதாரத்துறை அமைச்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நேற்றைய சந்திப்புக்கு அமைய வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நெளுக்குளம், செட்டிக்குளம் மற்றும் மனிக்பாம் பகுதிகளிலுள்ள முகாம்களுக்கு விசேட வைத்தியர்கள் குழுவை அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக 20 வைத்தியர்கள், 93 தாதிமார், 10 ஆய்வுகூட அதிகாரிகள், 10 சுகாதார சேவைகள் அதிகாரிகள், 10 உதவியாளர்கள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply