மலேசியாவிற்கான பயணத்திலிருந்து பின்வாங்கினார் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவிற்கான விஜயத்தை தவிர்த்துக் கொண்டுள்ளார்.   இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.  தவிர்க்கமுடியாத காரணம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள மாட்டார் என மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை மலேசியாவில் இஸ்லாமிய பொருளாதார மன்ற ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செல்லவிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply