ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் – இளங்கோவன்
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மசிகத்தில் காங்கிரஸ் பிரமுகர் பத்மநாபன் படத்தை முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான தீவிரவாதி கசாப்தூக்கில் போடப்பட்டான். இதேபோல ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உடனடியாக தூக்கிலிட வேண்டும்.
தமிழக அரசு ரூ. 10 கோடி பேக்கேஜ் டெண்டர் விடுகிறது. இது ஊழலுக்கு வழிவகுக்கும். தமிழக அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து முதல் – அமைச்சர் ஜெயலலிதா விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply