பங்களாதேஷ் தீ விபத்தில் 112 பேர் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே தஸ்ரீன் பேஷன் என்ற ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 112 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல அடுக்கு மாடிகளை கொண்ட இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதன் தரை தளத்தில் சாயப்பட்டறை உள்ளது.

நேற்று மாலை இங்கு திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ தொழிற்சாலையின் 6-வது மாடி வரை பரவியது. அப்போது அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கி தீயில் கருகினர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தும் தீயில் சிக்கி 112 பேர் பலியாகினர்.

பலர் தீயில் கருகி காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply