ஜனாதிபதியின் பதவியேற்பு தின வாழ்த்திற்கு 75 கோடி ரூபா செலவு – தயாசிறி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பதவியேற்பு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, சுமார் 75 கோடி ரூபா செலவில் பத்திரிகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது ஜனாதிபதி மனதால் கூட எதிர்பார்க்காத நிலைமையாக இருக்கக் கூடும்.  எனினும் இந்த விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply