தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தத் அமெரிக்கா திட்டம்
அமெரிக்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எவ்வாறு இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தாடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்த அறிக்கை ஒன்றைஇ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சமர்ப்பி;க்க உள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் கூட்டமைப்பு பிரதிதிகள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply