சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோரில் 40 வீதமானோர் இலங்கையர்கள்
அகதி அந்தஸ்தை எதிர்பார்த்து, சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களில் 40 வீதமானவர்கள் இலங்கையர்கள் என அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினர் தலைமை அதிகாரி ரியர் அத்மிரல் டேவிட் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பாக இலங்கை அவுஸ்திரேலிய தூதரகம் சினமன் கிரேண்ட் விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வேரை தடுக்க இலங்கை கடற்படையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டதக்கது. அவுஸ்திரேலிய கடற்படையினர், இலங்கை கடற்படையினரிடம் இருந்து பலவற்றறை கற்று வருகின்றனர்.
இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுவர்களுக்கு பணத்தை கொடுத்து, அகதி அந்தஸ்த்தை எதிர்பார்த்து, உயிரை பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்கு செல்வதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இவ்வாறு செல்பவர்கள் கைதுசெய்யப்பட்டு மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply