இலங்கையின் முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணுக்கு செல்கிறது
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) ‘சுப்றீம்செற்’, நாளை செவ்வாய்க்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று சுப்றீம்செட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி விஜித பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி ஏவப்படவிருந்த மேற்படி செயற்கைக்கோள், சீனாவின் காலநிலை சீரின்மை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே நாளைய தினம் இந்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது என்று தெரிவித்த விஜித பீரிஸ், இருப்பினும் குறித்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படும் நேரம் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply