மாத்தளை வைத்தியசாலை பகுதியிலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்பு
மாத்தளை பொது வைத்தியசாலைக்கு சொந்தமான நிலத்தில் மண் அகழும் போது பல மனிதர்களுடைய என சந்தேகிக்கும் விதமாக எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. உயிரியல் வாயு தயாரிப்பு தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்று குறித்த பிரதேசத்தை அகழும் போது மனித எலும்புகள் வெளிவந்துள்ளன.
இச்சம்பவத்தை தொடர்ந்து வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்பின்னதாக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாத்தளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
மாத்தறை நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் குறித்த நிலத்தை தொடர்ந்தும் அகழ்வதா இல்லையா என தீர்மானிக்கப்படவுள்ளது.
மாத்தளை வைத்தியசாலையின் இல 18இற்கு அருகில் உள்ள நிலப்பரப்பே அகழப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply