ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான மகஜர் ஐநாவுக்கு செல்கிறது
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற குற்றப்பிரேரணைக்கு எதிராக பெற்றுக்கொள்ளப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கவுள்ளதாக இளம் சட்டவுரைஞர்கள் சங்கம் அறித்துள்ளது. இதேவேளை, பொதுநலவாய சட்டவுரைஞர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சட்டவுரைஞர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் அந்த மகஜரை அனுப்பிவைக்கவுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து சட்ட நியாதியாக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply