யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினர் குவிப்பு
மாவீரர் தினத்தையோட்டி இன்று மாலை 6.05 மணியளவில் பல்கலைகழத்தில் சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளை மாணவர்கள் செய்தவேளை அதனை தடுக்கும் முகமாக பெருமளவான இராணுவத்தினர், பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் யாழ். பல்கலைக்கழக சூழலில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடினார்.
இவ் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் உள்ள மாவீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்னாலும் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள ஆனந்தகுமாரசுவாமி விடுதியிலும் நினைவு சுடர் ஏற்றினர்.
அதேவேளை பாலசிங்கம் விடுதிக்கு (பெண்கள் விடுதி) முன்னால் அச்சுறுத்தும் வகையில் பலர் நடமாடியதால் மாணவிகள் பயத்தில் விடுதிகளுக்கு அடைந்திருந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ .சரவணபவனும் அவருடன் கூட வந்த உதயன் ஆசிரியரையும் இனம் தெரியாத நபர்கள் தாக்க முற்பட்டுள்னர்.
முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்டார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களை வீசினார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினரை அவரின் உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பாக கூட்டி சென்றனர் எனவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் நின்ற மாணவர்கள் சிலரை இராணுவத்தினர் மருத்துவ பீடத்தில் உள்ள அறை ஒன்றினுள் பூட்டி வைத்திருந்ததாகவும் பின்னர் மருத்துவபீட பீடாதிபதி வந்தே மாணவர்களை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டு சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply