இலங்கை – செக் குடியரசு வர்த்தக உறவுகளில் விரிசல்

இலங்கைக்கும் செக் குடியரசுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து செக் குடியரசு கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதன் காரணமாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட வகையில் செக் குடியரசு வர்த்தகர்களுக்கு இலங்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக இலங்கை செக் குடியரசு, வர்த்தகர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது.

எவ்வாறெனினும், மனித உரிமை நிலைமைகள் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

செக் குடியரசு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் மார்டின் கொகேரெக் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செக் வர்த்தகர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக முன்னர் இலங்கை இணங்கியிருந்தது.

ஐரோப்பாவில் ஏனைய நாடுகளை விடவும் செக் குடியரசுகளுக்கு இலங்கை அதிக சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது.

எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து செக் குடியரசு குரல் கொடுத்ததனைத் தொடர்ந்து, இந்த வர்த்தக உறவுகளில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக செக் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply