இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
இலங்கையில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில் இராமேஸ்வரம் கடல் பகுதியில் விடுதலைப் புலிகல் ஊடுறுவி விடாமல் தடுக்கும் வகையில் விமானப்படை விமானங்களும், போர்க் கப்பல்களும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் என கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500-க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் என பாக்ஜலசந்தி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெப்பாகாத்தூன் போர்க்கப்பலும், ராணிஜிந்தன் போர்க்கப்பலும், இந்திய கடற்படைக்கு சொந்தமான டி.59 என்ற அதிநவீன போர் கப்பலும் ரோந்தில் ஈடுபட்டுள்ளன.
மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய கடற்படை ஹெலிகாப்டர், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாக பறந்து கண்காணித்து வருகிறது.
மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐ.சி.181, 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள், படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூபிரிவு போலீசார் கடலோரபகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பி வருகிறார்களா? இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து விசாரணை நடத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply