தமிழ் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்!

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு தமிழ் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை செல்ல வேண்டாம் என பிரசாரம் செய்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை இவ்வாறான செயற்பாடுகளினால் பிரிவினைவாதமே தலை தூக்கும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

‘இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் வகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரசாரங்களை மேற்கொண்டால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? அரசியல் தீர்வு கிடைக்காது அதற்கு பதிலாக பிரிவினைவாதமே தலைத்தூக்கும்.

வடமாகாணத்திலேயே கூடுதலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஈராக் மற்றும் சிரியாவில் இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன. என்பதை புலம்பெயர்ந்து இலங்கைக்கு எதிராக செயற்படும் தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் கட்சிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு வலியுறுத்த வேண்டும் மாறாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினால் தீர்வு கிடைக்காது’என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply