யாழ். பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா கவலை
இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள் குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியட்டுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனை கொண்டுள்ளது.
நவம்பர் 28ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை, இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால்; சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும்.
இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் அமெரிக்கத்தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.
பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும்; அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும்; நாம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply