யாழ் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.  சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (28) நடத்திய அமைதியான பேரணி மீது பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதலை இலங்கை ஆசிரியர் சங்கம் அருவருக்கத்தக்க செயலாக கருதி வன்மையாக கண்டிக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துஇ மூன்று வருடங்களுக்கு மேல் காலம் கடந்துள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின், பிரதேசம் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

கடந்த காலங்களில் வடக்கில் நடத்தப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் போது, கறுப்பு எண்ணெய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தவில்லை.  இவ்வாறான தாக்குதல்கள், இலங்கையில் ஜனநாயகம், பேச்சுரிமை, அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை மீறப்பட்டுள்ளதையே வெளிகாட்டியுள்ளன.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வட பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை ஏற்படுத்p கொடுப்பதாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply