முல்லைத்தீவு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
முல்லைத்தீவு பெரியாஸ்பத்திரியின் சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்களுக்கான உத்தியோக விடுதிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இத்திட்டத்துக்காக 130 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக பதில் ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்படி தகவலைத் தெரிவித்தார்.
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து வடபகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும், அப்பகுதியை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதன்படி, முல்லைத்தீவு பெரியாஸ்பத்திரியின் சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்களுக்கான உத்தியோக விடுதிகளை அமைக்கும் இத்திட்டத்துக்காக, அரச சார்பற்ற சர்வதேச நிறுவனமான அமெரிக்கெயாஸ் நிறுவனம்,120 மில்லியன் ரூபாவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply