தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் – ஹக்கீம்
தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளுக்குப் பதிலளிக்கவேண்டிய வகையில் இதுவிடயத்தில் அரசாங்கம் துரிதநடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்று விசாரணைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 1350 தமிழ் கைதிகளில் 1000ற்கு மேற்பட்டோரை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நீதி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்கிறது என்ற எதிர்க்கட்சியினரின் கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் யுகத்தில் நீதித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. எனினும், நீதியமை ச்சின் குழுநிலை விவாதத்தில் உரையா ற்றிய பெரும்பாலானோர் பிரதம நீதியரசர் தொடர்புபட்ட விடயத்தில் அரசு நீதிமன்றத்துக்கு எதிராகச் செயற் படுகிறது என்பதைக் காட்டும் வகை யிலேயே கருத்துக்களை முன்வைத்தனர்.
ஜ.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் நீதித்துறை சீர்குலைந்துபோயுள்ளதாக விமர்சித்தார். இவ்வாறு விமர்சிப்பவர்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்வது முக்கியம். நாம் ஒருபோதும் நீதித்துறை சீர்குலைய இடமளிக்க மாட்டோம். இன்னும் கூட பல நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றன. அடிப்படையற்ற விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மேற்கொள்ளப் படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து நீதித்துறையின் பல்வேறு துறைகளையும் நீதித்துறையின் நிர்வா கத்தையும் பலப்படுத்த பல திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.
எதிர்க் கட்சியினரால் விமர்ச்சிக்கப்படு கின்ற பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நீதிமன்ற பிரதானிக்கு எதிரானதேயன்றி நீதித்துறைக்கு எதிரானதல்ல. இதனை முழு நீதித்துறைக்கும் எதிரானது என காட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் வருடமாக அடுத்த வருடம் அமையும். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சிவில் வழங்குகளின் தாமதங்களை நிவர்த்திக்கும் வகையில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுதுணையுடன் பல காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நியாயாதிக்க சபைகளைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குத் தொடுப்போரின் நீண்டதூர பயணங்களையும், அசெளகரியங்களையும் தவிர்க்கும் வகையில் நியாயாதிக்க எல்லைகள் வகுக்கப்படும். புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு விசேட இணக்க சபைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், புதிய காதி நீதிமன்றங்களையும் நாடளாவிய ரீதியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நடுவர் தீர்ப்பு மையம் அடுத்த வருடத்தில் கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட் டுள்ளதுடன், தனியானதொரு மாடி இதற்கெனப் பெறப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் புத்தாக்கக் கருத்திட்டமாக இது அமையவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply