இன சமத்துவமின்மை தீவிரவாதத்திற்கு வழிவகுக்கும் – சந்திரிக்கா

தீவிரவாதம் உருவாக பிரதான காரணம் சமத்துவமின்மையே என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  ஒரு நாட்டில் இன சமத்துவம் இன்றேல் அது தீவிரவாதம் ஏற்பட வழிசமைக்கும் என நைஜீரியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் சுட்டிக்காட்டினார்.  

வறுமை, சமூக அரசியல் அநீதி போன்ற காரணிகளினால் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் கோபமும் விரக்தியும் அடைவதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான பல்வகைத்தன்மையை ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply