ஸ்ரீடெலோ காரியாலய தாக்குதல்! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது நேற்று முன்தினம் அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை ஸ்ரீடெலோ காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்களினால் சிறிய பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை. இந்நிலையிலேயே, இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் இன்று சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply