சபாநாயகரின் தீர்ப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வேண்டும்!
நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரங்களில் நீதித்துறையின் தலையீடு பற்றிய சபாநாயகரின் தீர்ப்பு, நீதிமன்றங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியது. சபாநாயகர் தனது தீர்ப்பினை முதல்நாள் அறிவித்திருந்த போதும் தெரிவுக்குழு உறுப்பினர் என்ற வகையில் தனக்கு நீதிமன்ற அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
‘எனக்கு ஒரு கட்டு கடிதங்கள் கிடைத்துள்ளன. சபாநாயகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த தீர்ப்புக்கமைய நாம் இந்த அறிவித்தல்களை புறக்கணிப்பதாயின் இந்த தீர்ப்பு பற்றி உத்தியோகபூர்வமாக நீதிமன்றங்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இதைப்பற்றி நீதிமன்றங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கும்படி சபாநாயகரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அமரதுங்க குறிப்பிட்டார்.
‘இதை கட்டாயம் செய்ய வேண்டும். இல்லையாயின் அறிவித்தல் விடப்பட்ட எம்.பி.க்கள், நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதாக கைது செய்யப்படுவர்’ என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
‘இவர்கள் விளக்கமறியலில் இருக்கின்றனர் எனக் கணித்து விசேட அதிரடிப்படையினர் அவர்களைக் கொன்றுவிடக் கூடும்’ எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply