இந்திய அமைதிக்காக்கும் படையினர் விடுதலைப் புலிகளிடம் தோல்வியடைந்தனர்

தமிழீழம் குறித்து கொள்கை இருக்கும் வரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் அல்லது அதன் தலைவர்களின் ஒவ்வொரு மரணத்தின் பின்னரும், புதியவர்கள் சரியான தருணத்தில் நியமிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ பிரிகேடியர் ரவி பல்சோகார் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்தியாவின் அமைதிப்படையினர் நிலைக் கொள்ளச் செய்யப்பட்டு 25 வருடங்களின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய அமைதிக்காக்கும் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளை 10 நாட்களில் அழித்துவிட முடியும் என்று அந்த நாட்களில் பரவலாக கருதப்பட்டது.  எனினும் இது சாத்தியப்படவில்லை.

இந்தியாவின் அமைதிக்காக்கும் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தோல்வி கண்டனர் என்பதையே பிரிகேடியர் ரவி பல்சோகார் தமது புத்தகத்தில் வலியுறுத்தியுள்ளார்.  இந்த கருத்து தொடர்பில் தமது சிரேஷ்ட அதிகாரிகள் தம்மிடம் சினம் கொள்ளலாம்.

எனினும் இதற்கு மன்னிப்பு கோருவதுடன், அமைதிக்காக்கும் படையினர் இலங்கையில் தோல்வி கண்டமைக்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், அதன் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழீழ ஆதரவாளர்களின் மத்தியில் இன்னும் தமிழீழ கோரிக்கை உயிர்ப்புடன் காணப்படுகிறது.

இந்த கொள்கை உயிர்ப்புடன் காணப்படும் வரையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் பிரதியீடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply