ரணிலின் பதவி காலம் 6 வருடங்களுக்கு நீடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை 6 வருடங்களுக்கு நீடித்துக் கொள்ளும் யோசனை இன்று கட்சியின் 54வது மாநாட்டில் முன்மொழியப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவாக 4978 பேர் வாக்களித்துள்ளனர். யோசனைக்கு எதிராக 337 பேர் வாக்களித்துள்ளனர்.

ஐதேக தலைமை பதவியை 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனையை ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்மொழிந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா அதனை வழிமொழிந்தார்.

இதற்கு எதிராக சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண தலதா அத்துகொரள ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply