பெண்களின் அபிவிருத்திக்கு வருடாந்தம் கணிசமானளவு நிதி ஒதுக்கம்
பெண்களின் அபிவிருத்திக்கென அரசு பல்வேறு அமைச்சுகள் ஊடாக கணிசமான அளவு நிதியை வருடாந்தம் ஒதுக்குகின்றதென சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, கல்வியமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்கள் ஊடாக அரசு தனது வருடாந்த வரவு -செலவுத் திட்டத்தில் பெண்களின் அபிவிருத்திக்கென நிதியொதுக்கி பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, பெண்களின் நலனோம்பு விடயங்கள், அவர்களின் வாழ்வாதாரம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, முறைப்பாடுகள் சட்டங்களை இயற்றி அவற்றை ஏனைய அமைச்சுக்கள் அமுல்படுத்துவதற்கு ஏதுவாக கொள்கைகளை வகுத்துக் கொடுப்பதுதான் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் பணியாகும்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கேற்ப பெண்களின் அபிவிருத்திக்கென்றும் கணிசமான அளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. அதேவேளை, இன்னும் கூடுதலான நிதி பெண்களின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டால் அதனைக் கொண்டு மென்மேலும் பெண்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள அது உதவியாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply