முல்லைத்தீவு குருவிக்குளம் சந்தி நேற்று படையினர் வசம்: பிரிகேடியர் உதய நாணயக்கார
முல்லைத்தீவு, குருவிக்குளம் சந்தியை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த குருவிக்குளம் பிரதேசம் அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் புலிகளால் மறைத்து வைக்கப் பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரி – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்குழல் இயந்திர துப்பாக்கி ரவைகள் முழுமையாக நிரப்பப்பட்ட கொள் கலன் ஒன்றையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.
குருவிக்குளம் மேற்கு பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றிய இராணுவத் தின் 57வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற் கொண்டு வருவதாக பிரி கேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவில் எஞ்சியுள்ள புலிகளின் பிரதேசங்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply