மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை கொலை: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

அநுராதபுரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை இலக்கு வைத்து கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தற்கொலைதாரியை செட்டிக்குளத்திலிருந்து மாங்குளத்துக்கு அழைத்து வந்தாரென்ற சந்தேகத்தின் பேரில் அபுசாலி லாபீர் என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்றுக்  காலை 5.15 மணியளவில் நேரியகுளம், சியம்பலகஸ்கடவிலுள்ள வீதிச் சோதனைச்சாவடி ஒன்றில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அநுராதபுரத்திலுள்ள ஜக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, அவரது மனைவி உட்பட 23 பேர் கொல்லப்பட்டது தெரிந்ததே.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply