அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வழங்கத் தயார்: கிழக்குத் தீமோர்
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என கிழக்குத் தீமோர் தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரச்சினைய இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என எச்சரித்திருக்கும் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி ரொஸ் ரமோஸ் ஹொர்டா, இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மாத்திரமே தீர்வொன்றைக் காணமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
“மனித கௌரவம், மனிதாபிமானப் பொறுப்புக்கள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமலும் சகல இலங்கையினரதும் நன்மைக்காக இருதரப்பும் நீடித்த சமாதான இணக்கப்பாட்டை வென்றெடுப்பதற்கான பேச்சுவார்த்தை குறித்து அலட்சியமாகவிருந்தால் நீடித்த சமாதானம் சாத்தியமில்லை” என நோபல் பரிசைப் பெற்ற கிழக்குத் தீமோர் ஜனாதிபதி கூறினார்.
“மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி எவர் பேசினாலும் வரலாறு, மனிதர்களின் தன்மை அல்லது உண்மையான சமாதானம் குறித்து சிறிதளவே விளங்கிக்கொண்ட தன்மை காணப்படுகிறது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1975ல் கிழக்குத் தீமோர் பெற்ற அனுபவத்தை அந்தநாடு இன்னமும் அனுபவித்துக்கொண்டிருப்பதாக கிழக்குத் தீமோர் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply