சிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்

சிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்.சிம்பாபே ரொபேர்ட் முகாபோக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுவாங்கிராய்க்கும் இடையில் கூட்டணி அரசாங்கம் அமைப்பாதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையிலேயே இந்தப் பதவியேற்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த வருடம் சிம்பாபேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை எதிர்த்துப் போட்டியிட்ட சுவாங்கிராய் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். எனினும், ஆட்சி துறப்பதற்கு ரொபேர்ட் முகாபே இணங்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இழுபறிநிலையின் பின்னர் முகாபேயுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க சுவாங்கிராய் இணங்கியிருந்தார். இதற்கமைய இரு தலைவர்களுக்கும் இடையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“நான் ஏன் இவ்வாறு செய்தேன் இதனால் அரசியல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் கேள்விக்கு என்ன பதில் போன்ற சந்தேகங்களுக்கு விரைவில் விடைகிடைக்கும்” என சாங்கிராய் கூறினார்.

“இந்த முடிவை நாங்களே எடுத்துள்ளோம். எந்தவிதமான அழுத்தங்களுமின்றி இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் அவர்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென சுவாங்கிராய் தனது பதவியேற்வு விழாவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply