வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளால் மக்களுக்கு பாதிப்பை தவிர்ப்பதற்காக அமெரிக்கா உதவி
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைத் தடுப்பதற்கும், அவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அமெரிக்க அரசாங்கம் 5 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியுள்ளது. முல்லைத்தீவில் மீளக் குடியமர்ந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வாரம் தொடக்கம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பு (ஸிஷிதியிளி) மற்றும் ஆயுதக் களைவு மற்றும் குறைப்பிற்கான இராஜாங்கத் திணைக்கள அலுவலகம் ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்ட கண்ணிவெடி அபாயக் கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்ற வுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் (யுனிசெஃப்) நடைமுறைக்கிடப்படும் இந்த கண்ணிவெடி அபாயக் கல்வியானது பாதுகாப்பான மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை மீள நிலைநிறுத்தல் ஆகியவற்றுக்கு துணைபுரியும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வருகின்றதொன்றாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
‘முன்னாள் மோதல் வலயங்களில் வாழும் சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கண்ணிவெடி அபாயக் கல்வியானது முதற் தேவையானதொன்றாகும். கண்ணிவெடி சூழ்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மற்றும் அங்கு சென்று வருகின்ற மக்கள் ஆகியோருக்கு கண்ணிவெடி அபாயக் கல்வியை வழங்குவதனூடாக வரக்கூடிய ஆபத்தை குறைப்பதே எமது நோக்கமாகும் என யுஎஸ்எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜேம்ஸ் பெட்னர் தெரிவித்தார்.
‘மோதலால் பாதிக்கப்பட்ட வலயங்களில் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் கண்ணிவெடி மற்றும் யுத்தத்தில் வெடிக்காத பொருட்களினால் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களும் அதிகரிக்கும்.
இதனால் தொடர்ச்சியான கண்ணிவெடி அபாயக் கல்வியானது குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாகும் என யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதி ரேஸா ஹொஸைனி தெரிவித்தார்.
இந்த முன்முயற்சியானது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கண்ணிவெடி பிரதேசங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதற்கும் சமூக மற்றும் பாடசாலைகளை மையமாகக் கொண்ட கண்ணிவெடி அபாயக் கல்வியை வழங்கவும் கிராமங்களுக்கான கண்ணிவெடி செயற்திட்டத்தை வடிவமைக்கவும் துணைநிற்கும் என்றும் இந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply