இன்னும் 5 ஆண்டுகளில் தனது முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பும்!

இன்னும் 5 ஆண்டுகளில் தனது முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பும் என்று விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) ‘சுப்றீம்செற்-1 யை, இலங்கையானது சீனாவுடன் இணைந்து நவம்பர் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு  வெற்றிகரமாக  ஏவியது.

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளானது. தனது ஆரம்ப வயதிலேயே இருக்கின்றது. இந்நிலையில் சீனாவுடன் இணைந்து இன்னும் 7 ஆண்டுகளில் முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பிவைக்கும்.

அத்துடன் இன்னும் இரண்டு செயற்கைகோள்கள் 2015 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்படும். அதில் ஒன்று அடுத்தவருடம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் சொன்னார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply