நீதிமன்ற அழைப்பாணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – பாராளுமன்றத் தெரிவுக்குழு

மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பாராளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. நீதிமன்றங்களினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை உத்தரவுகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ ஏற்கனவே ஆலோசனை வழங்கியிருந்தார். இந்த ஆலோசனையை பின்பற்றப் போவதாக பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பதினொரு உறுப்பினர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிரானி பண்hரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்திய பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களும், சபாநயாகரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் சமால் ராஜபக்ஷவினால் கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

வெளிநபர்களோ நிறுவனங்களோ பாராளுமன்றிற்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என சபநாhயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையீடு செய்யக் கூடாது என்பது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அமரர் அனுர பண்டாரநாயக்க தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளதாக பிரதி சபாநயாகர் தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு நடவடிக்கைககள் எடுக்கப்படும் எனவும், இந்தத் தீர்ப்பை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஏற்றுக் கொண்டதாகவும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply