இலங்கையில் மின் உற்பத்தி திட்டம் தொடங்குகிறது

அணு விடயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள ஈரான், இலங்கையில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்கிறது. 106 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் 180,000 குடும்பங்களுக்கு மின் விநியோகிக்கப்படவுள்ளது.

ஈரானின் SUNIR என்ற நிறுவனத்துடன் 2009ம் ஆண்டு அப்போதைய இலங்கை மின்துறை பிரதி அமைச்சர் சாகல ரத்நாயக்க “RE8,” என்ற பெயரில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் நிறுவனம் மின் உற்பத்தி திட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதற்கான காப்புறுதியை ஈரான் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வழங்குகிறது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாதென இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்கா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply