ஜனாதிபதி மகிந்த ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பர் – ஆப்கான் அமைச்சர்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பர் என இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸல்மால் ரசூல் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இலங்கைக்கு வருகைத்தரக்கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் – இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எங்கள் நாட்டு மக்கள் ஒரு சிறந்த நண்பனாகவே கருதுகின்றனர் எனவும் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்தார்
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஜனாதிபதி வினவினார் அதற்கு பதிலளித்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் – தற்சமயம் எமது நாடான ஆப்கானிஸ்தான் அபிவிருத்தியடைந்த போதிலும் குறிப்பாக பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை யுத்தம் ஒன்றை வெற்றி கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் கேட்டுக் கொண்டார்.
அமைதியானதோர் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதற்கு இலங்கையின் ஒத்துழைப்பும் தேவை என்று கூறிய ஆப்கானிஸ்தானின் அமைச்சர், ஆப்கானிஸ்தான் எவருக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில், புதுடில்லியிலுள்ள ஆப்கானிஸ்தானின் தூதுவர் ஷஹீடா, ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் அரசியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஸீசுத்தீன் அஹமட் சாடா , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply