நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது!
பல்கலைக்கழக செயற்பாடுகள் நடை பெறுவதற்கும், மாணவர்களின் விடுதலைக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எவ் வாறாயினும், நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு முற்றாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், கைது செய்யப்பட்டுள்ள பல்கலை மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
‘வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்ற நிபந்தனையை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக செயற்பாடுகள் நடைபெறுவதற்கும், மாணவர்களின் விடுதலைக்கும், கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. 30 வருடத்திற்கு முன்னிருந்த நிலைமையை மீண்டும் கொண்டுவர தம்மால் அனுமதிக்க முடியாது.
சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் இம்மாணவர்கள் முயற்சி செய்தார்கள் என்ற அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply