பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகள் 30 வீதத்தால் அதிகரிப்பு
2013ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கல்வி மற்றும் ஆய்வு கொடுப்பனவுகளை 25 முதல் 30 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தினர் நடத்திய 100 நாள் வேலை நிறுத்தத்தின் பின்னர் அரசாங்கத்துக்கும்- பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கப் பிரதிநிதிகள் பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானம் குறித்து உயர்கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கியமை குறித்து இலங்கை சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் செயலாளர் டொக்டர் அஜித் திஸாநாயக்க அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கல்வி- உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சி ஆகிய துறைகளில் எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் பெருமளவு முதலீடுகளைச் செய்யவுள்ள நிலையில் பல்கலைக்கழக விரைவுரையாளர்களும்- ஏனைய துறைசார் வல்லுனர் களும் அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டை யடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் முன்னர் வருமானமாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும்- இதனை வரு மானமாகக் கணக்கெடுப்பதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன்- கொடுப் பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
புதிய மாற்றங்களுக்கு அமைய விரிவு ரையாளருக்கு 60 வீதமான அதிகரிப்பும்- சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு 75 வீத அதிகரிப்பும்- இரண்டாம் தர சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு 80 வீத அதிகரிப்பும்- பேராசிரியர்ளுக்கு 85 வீத அதிகரிப்பும் வழங்கப்படவுள்ளன.
இந்த அதிகரிப்பின் 50 வீதம் ஜனவரி மாதம் முதலும் எஞ்சிய அதிகரிப்பு ஜூன் மாதத்திலிருந்தும் வழங்கப்படவிருப் பதாக பொருளாதார அபிவிருத்தி அமை ச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படைச் சம்பளத்துக்கு சமானமாக ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கொடுப்பனவுகள் 25 வீதம் முதல் 35 வீதம் அதிகரித்து வழங்கப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply