23 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைப்பு
23 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த 29 புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு மனுஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 23 பேர் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக இவ்வாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவர் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply