நாட்டின் சமகாலப் பிரச்சினையின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு ஊடகங்கள் செயற்பட வேண்டும்:கெஹலிய ரம்புக்வெல்ல
நாட்டின் சமகாலப் பிரச்சினையின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு ஊடக நிறுவனங்கள் செயற்பட வேண்டுமென்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.வட பகுதியில் சிவிலியன்களின் நிலைமை தொடர்பில் சில சர்வதேச அமைப்புகளும், ஊடக நிறுவனங்களும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதாகக் உறிய அமைச்சர், நிலைமையைப் புரிந்துகொண்டு செயற்படுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி நிறுவனங்கள் பக்கச் சார்பின்றி உண்மையை வெளியிட வேண்டுமென்று கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல, பிரச்சினையின் தாற்பரியத்தைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு இரண்டு ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply