இனவாத, மதவாத நிலைமை மீண்டும் தோற்றம் – சோமவன்ச

இனவாத மற்றும் மதவாத நிலைமையொன்று மீண்டும் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை அரசாங்கம் தனது ஆசிர்வாதமாகவே கருதி வருகின்றது என்று தெரிவித்த அவர், பல்வேறு விதமாக கோபதாபங்களை தோற்றுவிக்காமல் நீண்டகால நோக்குடன் செயற்படுமாறு இலங்கை வாழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யார் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது எனவும் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply