கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்!

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலக வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முன்கூட்டியே வெளியானமைக்காக, கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டுமென  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பரீட்சை முறைமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் பல தேசிய பரீட்சைகளின் போது இவ்வாறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞான வினாதாள் முன்கூட்டியெ வெளியாவதற்கு பரீட்சை திணைக்கள அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வினாத்தாள்களைப் பெற்றுக் கொண்டவர்களை கைது செய்வதன் மூலம் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சை திணைக்கள ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளே இந்த சூழ்நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானமைக்கு கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply