முஸ்லிம்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் தொடர்பில் மு.கா. பேராளர் மாநாட்டில் விசேட கவனம்

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான பிரசாரங்கள் தொடர்பில் ஆராயப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனோடு திவிநெகும சட்டமூலம், 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் இதன்போது விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாக உத்தியோகத்தர்களை அறிவிக்க இருப்பதுடன், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப்புக்கு விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற உள்ளது.

கட்சியின் தவிசாளர் தலைமையில் நடைபெற இருக்கும் இப்பேராளர் மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முக்கிய உரையாற்ற இருக்கின்றார். நாட்டின் இன்றை அரசியல் சூழலில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சிக்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உள்ளக முரண்பாடுகள் பற்றியும் கருத்துகளை முன்வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாட்டின் பின்னர் கட்சியில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply