வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலி
வட இந்தியா முழுவதும் நிலவும் கடும் குளிர் காரணமாக குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச வானொலி அறிவித்துள்ளது. உத்திர பிரதேசத்திலேயே கூடுதலானோர் குளிருக்குப் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா ஆகிய மற்ற வடஇந்திய மாநிலங்களிலும் கடுமையான குளிர் காலநிலை நிலவுகிறது.
வீடற்றவர்களும் வயது முதிந்தவர்களுமே உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள்.
தலைநகர் டெல்லியிலும் அண்டை மாநிலங்களிலும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் வெப்பநிலை 7 பாகை வரை குறைந்து, கடும் குளிர் காணப்படுகிறது. அங்கு விமான பயண நேரங்களும் குழம்பியுள்ளன.
ராஜஸ்தானில் வெப்பநிலை 3.8 பாகை வரை குறைந்து மாநிலமே உறைந்துபோயுள்ளது. அங்கும் ரயில்களும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குளிர் காலநிலை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்குமென்று இந்திய வானிலை ஆய்வு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply