ஜப்பான் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து
ஜப்பானில் நடைபெற்று முடி ந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிர தமராகப் பதவி யேற்றிருக்கும் ஷின்சோ அபேக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஜப்பானின் புதிய பிரதமருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அனுப்பிவைத்திருக்கும் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜப்பானிய மக்கள் உங்கள் தலை மைத்துவத்தின் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.
அரசியல் அரங்கில் உங்களுக்குக் காணப்படும் உரிமை வெளிக்காட்டப்பட்டுள்ளது. ஜப்பானிய மக்கள் மனநிறைவை எட்டுவதற்கு உங்கள் தலைமையிலான அரசாங்கம் தகுந்த வழிகாட்டல்களை வழங்கும் என நான் நம்புகிறேன்.
ஜப்பான் – இலங்கை ஆகிய இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்கொண்டு செல்லப்படும் என நாம் நம்புகிறேன்.
இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தோற்றம்பெற்று 60 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவுகள் மேலும் பலமடையும் என எதிர்பார்க்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply